English tamil

அன்னை சமயபுரத்தாள் திருக்கட்டளையால் ஸ்ரீ சுவாமிஜி நடத்திய அதிசயங்கள் அற்புதங்கள்
அன்னை சமயபுரத்தாள் திருக்கட்டளையால் ஸ்ரீ சுவாமிஜி நடத்திய அதிசயங்கள் அற்புதங்கள்

  Swami Sakthi Adimai
 1. ஸ்ரீ சுவாமிஜி அவர்கள் 1994-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சதுரகிரி ‘சித்தநாதன்’ குகை மேல் பகுதியில் கற்ப+ர யாகம் நடத்தினார்கள். உலக நன்மைக்காக இது நடத்தப்பட்டது. ஸ்ரீசுவாமிஜியின் அருளால் அவரது தொண்டர்கள் சிவ தரிசனம் கண்டனர். குகையின் மேல் பகுதி மரவேர்களால் பின்னப்பட்டு மேடை போல் அமைந்தது ஒரு அதிசயம்.
 2. 1994 அக்டோபர் மாதம் அமாவாசை அன்று ஸ்ரீசுவாமிஜி தனது தவ வலிமையால் வானில் பௌர்ணமி நிலவு தோன்றச் செய்தார்.
 3. 1997-ம் ஆண்டு ஆவணி அமாவாசை அன்று சுருளி மலையில் ‘கைலாச நாதர் புடவு’ (குகை)யில் யாரும் சுலபமாக செல்ல இயலாது. குகையினுள் அமர்ந்து தியானம் செய்ய போதிய உயரம் இல்லாமல் இருந்தது. அப்பேற்பட்ட குகையினுள் ஸ்ரீசுவாமிஜி சென்று தியானம் செய்யும்போது குகையின் மேல்புறம் சுமார் 1½ அடி உயரம் தூக்கி கொடுத்ததாகவும், ஸ்ரீசுவாமிஜியின் கழுத்தினை ஐந்து தலைநாகம் சுற்றியிருந்ததையும் பொதுமக்கள் பார்த்ததை, பொதுமக்கள் கூறினார்கள்.
 4. 06-07-1998 முதல் 10-07-1998 வரை உலக அமைதி நல்வாழ்வு வேண்டி ஸ்ரீசுவாமிஜி அவர்கள் 100 மணிநேரம் தவவேள்வி நடத்தினார்கள். தவவேள்வி மனித தொடர்பு ஏதும் இல்லாமல் ‘தனிக்குடில்’ அமைக்கப்பட்டு, கதவு வெளிப்பக்கமாக ப+ட்டப்பட்ட நிலையில், உண்ணாமல், உறங்காமல் ஸ்ரீசுவாமிஜி நடத்தினார்கள். ஸ்ரீசுவாமிஜி தவவேள்வி முடிந்து, தங்க ஒளிபிழம்பாக வெளியே வந்ததை பக்தர்கள் பார்த்து பரவசம் அடைந்தார்கள்.
 5. Swami Sakthi Adimai
 6. ஸ்ரீசுவாமிஜி 1998-ம் ஆண்டில் சமயாள்குடில் மாரியம்மன் சக்திபீட வளாகத்தில் ஆவணி அமாவாசை அன்று யாகம் நடத்தியபோது அவர்களது சிரசு வழியாக அக்கினி இறங்கியது.
 7. அதே 1998-ம் ஆண்டில் ஸ்ரீசுவாமிஜி மனிதகுல மேம்பாட்டிற்காக மற்றொரு 23 மணி நேர மௌன விரத வேள்வி மேற்கொண்டார்கள்.
 8. 1999-ம் ஆண்டு மதுரை அருகே உள்ள அழகர் கோவில் மலையில் மத நல்லிணக்கம், இயற்கை பேரழிவுகள் ஏற்படாமல் மனித குலத்தைக் காக்க தவவேள்வி நடத்தினார்கள். மேலும் யோக நரசிம்மர் ஆலயத்தில் மௌன தவம் நடத்தினார்கள்.
 9. ஸ்ரீசுவாமிஜி பாபநாசம் ‘கல்யாண தீர்த்த’ கட்டத்தில் 1999-ல் யாகம் நடத்தினார்கள். அங்கு அவர்கள் இளம் வயதிலேயே துறவறம் மேற்கொண்டு, சுமார் 80 வருடங்களுக்கு மேல் தவம் செய்துவரும் கல்யாணி அம்மாள் அவர்களுக்கு தாயின் திருக்கட்டளைபடி அம்மையாரின் பிறவி ரகசியத்தை எடுத்துரைத்தார்கள். பிறவாநிலை அடைபவர்கள், மகான்கள் யுக புருஷர்கள் அங்கு செல்லும்போது சந்தன மழை பொழியும் என்று பொதுமக்கள் கூறுகின்றனர். அதன்படி ஸ்ரீ சுவாமிஜி யாகம் நடத்திய இரவு சந்தனமழை (சந்தனம் பாறைகள் எங்கும் தெளிக்கப்பட்டாற் போல்) பொழிந்திருந்தது.
  அதே இடத்தில் ஓடும் நதியில் நீருக்கடியில் மீன்கள் நிறைந்திருந்த பகுதியில் ஸ்ரீ சுவாமிஜி சுமார் 3 மணி நேரம் தன்னுடைய தொண்டர்களுடன் தவம் செய்தார்கள். தவம் முடியும் வரை மீன்கள் எவரையும் தொந்தரவு செய்யவில்லை.
 10. Swami Sakthi Adimai
 11. 2000-ம் ஆண்டில் கார்கில் யுத்தம் முடிவுக்கு வரவேண்டும் என்று காலை 7-30 மணி அளவில் சுமார் 500 பள்ளிக்குழந்தைகள் கலந்துகொள்ள, ஸ்ரீசுவாமிஜி மௌனவிரதம் மேற்கொண்டார்கள். அன்று மாலையிலேயே யுத்தம் நிறுத்தப்பட்டதாக அறிவிப்பு வெளியாயிற்று. இது பாரத தேசத்திற்கு மிகப் பெரிய மகிழ்ச்சி மிக்க செய்தியாக இருந்தது.
 12. ஸ்ரீசுவாமிஜி அவர்கள் 2000-ம் ஆண்டில் ‘காகபுஜண்டர்’ குகைக்கு (நாக தீர்த்தம்) சென்று வந்தார்கள். மனிதர்கள் செல்ல முடியாத, செல்ல முயற்சித்தால் படுத்தே செல்ல வேண்டிய குகை என்று மக்கள் குகை வாயிலில் பேசிக் கொண்டிருக்கும்போது ஸ்ரீசுவாமிஜி திடீரென்று மாயமானார்கள். மக்கள் ஸ்ரீசுவாமிஜி எங்கே என்று தேடியபோது ஒருவர் பாம்பு ஒன்றுகுகையினுள் சென்றதாகக் கூறினார்கள். ஸ்ரீசுவாமிஜி தான் பாம்பு வடிவத்தில் குகைக்குள் சென்று தியானம் செய்து திரும்பியுள்ளார்கள் என்று அங்கு இருந்தவர்கள் கூறினார்கள்.
 13. 2005-ல் ஸ்ரீசுவாமிஜி இராமேஸ்வரம் சென்று சங்கரமடத்தினுள் தியான செய்யும்போது கருடன் வட்டமிட்டதையும் தவம் செய்யும் நிலையில் அவர் புலிப்பாணி சித்தர் தோற்றம் காட்டியதாக உடன் சென்றவர்கள் கூறினார்.