English tamil

ஸ்ரீ ல ஸ்ரீ சுவாமி சக்தி அடிமை வாழ்க்கை குறிப்பு
ஸ்ரீ ல ஸ்ரீ சுவாமி சக்தி அடிமை வாழ்க்கை குறிப்பு

ஸ்ரீ சுவாமி சக்தி அடிமை அவர்களின் இயற்பெயர் ஏ.சுப்பிரமணியன் என்பதாகும் ஸ்ரீ சுவாமி அவர்கள் 15-01-1949 (தை மி 2ம் நாள்) சனிக்கிழமை- ``தைப்பூச திருநாளில் அவதரித்தார்கள் தந்தையார் பெயர்.திரு. ளு.வீரராகவய்யர் ஆவார்கள். தாயார் பெயர் திருமதி. பொன்னம்மாள், கேரள நாட்டை பூர்விகமாகக் கொண்ட குடும்பம் மதுரைக்கு வந்து வாழ ஆரம்பித்தது.

எட்டா நிலையை அடைய, மற்றவர் வாழ்வில் எட்டா நிலையை அடைய, எட்டாவது நபராக குடும்பத்தில் ஸ்ரீசுவாமி அவதாரமெடுத்தார்கள்.

ஸ்ரீ சுவாமி சிறுவயது முதலே பிறர்க்கு உதவி செய்வதில் உறுதி தான் ஈடுபடுகின்ற செயலில் வெற்றி காண கடினமான உழைப்பு, திட்டமிட்டு செயல்படுதல், கூரிய ஞாபக சக்தி நினைவாற்றல், மிகமிக வேகமாக செயல்படுதல் போன்ற தன்மைகளுக்குரியவர். ஆடம்பர நிலை வெறுத்து எளிமையாக வாழ்வதே சிறந்தது என்ற எண்ணம் கொண்டவர்.

ஸ்ரீ சுவாமியின் இளமைபருவத்தில் வறுமையின் கொடுமை கண்டும் மக்கள் ஒடுக்கப்படுவதையும் பார்த்து இறைவன் உண்டு. என்றால் ``ஏன் இந்த நிலை’’ என்ற கேள்வி எழுந்தது. இதன் காரணமாக கடவுள் இல்லை என்ற எண்ணம் மேலோங்கியது. இந்நிலையிலிருந்த ஸ்ரீ சுவாமி அவர்களை தாய் சமயபுரத்தாள் ஆட்கொண்டாள்.

தாய் சமயபுரத்தாள் ஸ்ரீ சுவாமி அவர்களின் ஆற்றல் சக்தியை உலகு அறியும் பொருட்டு, தன் நிழலாக அவர்களை தேர்ந்தெடுத்து அற்புதங்களை அதிசயங்களை காட்டத் தொடங்கினார்.

1984 ம் ஆண்டு ரெங்கநாயகி எனும் சீமாட்டியை கைபிடித்தார். இல்லற வாழ்வை நிறைவோடு நடத்தி வந்தார்.

ஸ்ரீ சுவாமி தாய் சமயபுரத்தாளை தன் குருவாக ஏற்றுக் கொண்டார்கள். தியானத்தின் பல அரிய சக்திகளை அன்னையின் அருளால் பெற்றார்கள். 1992 -ம் ஆண்டு பழனியில் ஜட்ஜ் சுவாமி மடம் அருகில் காளி சிலையை வணங்கிய போது அருள் வாக்கு வெளிப்படத் தொடங்கியது.

இன்னல்களையும் துன்பங்களையும் அனுபவித்த மக்கள் ஸ்ரீ சுவாமியை நாடி வந்து அவர்களின் நல்வாக்கு மூலம் தங்கள் துயர் நீங்கப்பெற்றனர்.

``மதுரை கோட்ஸ்ஸ்’’ நிறுவனத்தில் வேலையும் பார்த்துக் கொண்டு மக்கள் துயர் துடைக்க ஆன்மீகப் பணியையும் ஆற்றி வந்தார்கள்.

100 மணி நேர வேள்வி, ஏழு நாட்கள் மௌனவிரதம் போன்றவற்றை அனுசரித்து சமுதாய நல் வாழ்விற்கு உறுதுணையாய் இருந்தார்கள்.

மதுரை சம்மட்டிபுரத்தில் தன் இல்லத்தில் இச்சேவையை செய்து வரும்போது ஒருநாள் தாய் சக்தி கட்டளை ஒன்று இட்டாள். மதுரை கோட்ஸ்ஸ் நிறுவனத்தில் பார்த்து வரும் வேலையை விட்டு விட்டு தனக்கு நாள் முழுவதும் தொண்டு செய்ய வேண்டும். என்பதே ஆகும். தாயின் வார்த்தையை சிரமேற்கொண்டு தான் வேலை பார்த்த ‘லூம்செட்நூற்பிரிவு’ இடத்திலிருந்து வெளியேறி தான் வேலையை இராஜினாமா செய்வதாக மேலதிகாரிகளிடம் கூறினார்கள்.

இக்கால சூழ்நிலையில் (1996 ம் ஆண்டு) இரு ஆண்வாரிசுகளுக்கு தந்தையாவார். இல்லத்தரசி திருமதி ரெங்கநாயகி அவர்களிடம் நடந்ததைக் கூறினார். கணவனே கண் கண்ட தெய்வம்’’ என்னும் சொல்லுக்கேற்ப கார்த்தி (9 வயது) சரவணா (6 வயது) என்ற இரு குழந்தைகளையும் கவனித்துக் கொண்டு கணவருக்கு ஆன்மீகப் பணியில் முழு ஒத்துழைப்பையும் கொடுப்பதாக திருமதி ரெங்கநாயகி சமயபுரத்தாளின் முன்னிலையில் உறுதி கொடுத்தார்கள்.

1988 ம் ஆண்டு முதல் இன்றுவரை ஸ்ரீ சுவாமி முழுமையாக ஆன்மிகத்தில் ஈடுபட அனைத்து வகையிலும் உறுதுணையாக இருந்து வருகிறார்கள். ஸ்ரீ சுவாமியின் இல்லத்தரசியும் முழுமையாக தியானத்திலும் ஈடுபட்டு ஸ்ரீ சுவாமிகள் ஆன்மிக சக்தி அதிகரிக்க பக்கபலமாக இருந்து வருகிறார்கள். ஸ்ரீ சுவாமியின் அதிவேகத்திற்கு ஈடு கொடுத்து இம்மியளவும் விடுபடாமல் செயல்களை ஆற்ற உதவி புரிகிறார்கள்.

ஸ்ரீ சுவாமி இவ்வாறு ஆன்மீகப் பணி ஆற்றி வரும் போது ``தாய் சக்தி” தனக்கு ஒரு கோட்டம் அமைக்க வேண்டும் (ஆலயம் கட்ட) என்ற உத்தரவு பிறப்பித்து தற்போது ஆலய வளாகம் அமைந்துள்ள இடத்தையும் இரவு 10 மணிக்கு வந்து காட்டச் செய்தாள்.

தாய் சமயபுரத்தாளின் திருவாக்கே வேதம் வாழ்வு என்று உறுதியாய் இருந்த ஸ்ரீ சுவாமி 1998ஆம் ஆண்டு ஆலய நிர்மானப் பணியை தொடங்கினார்கள்

2002 ம் ஆண்டு ஆலயம் கட்டி முடிக்கப் பெற்று மகா கும்பாபிஷேகம் நடந்தேறியது.

ஸ்ரீ சுவாமி தற்போதுள்ள ஆலயத்தில் அருள்வாக்கு பணி, சமூக நல்ல சிந்தனைகளை ஏற்படுத்தல், உலக அமைதி நல்வாழ்வு வேண்டி தியானம் ஆகியவற்றை தொடர்ந்து செய்து நல்வழி பணியில் ஈடுபட்டு கொண்டிருக்கிறார்கள்.